ஆண்கள் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஐசிசி தரவரிசை வரலாற்றில் அதிக தரவரிசை பெற்ற இந்திய டெஸ்ட் பந்து வீச்சாளராக புதிய சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினின் 904 புள்ளிகளே சாதனையாக இருந்தது.
இதனை பும்ரா (907) முறியடித்துள 907 புள்ளிகள் பெற்றுள்ளார்
3-வது இடத்தில் ஆஸ்திரேலிய அணித் தலைவர் கம்மின்ஸ் உள்ளார்.
பாக்ஸிங் டே டெஸ்டில் அவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இவர் துடுப்பாட்டத்திலும் ; சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் டெஸ்ட் சகலதுறை வீரர்கள் ; தரவரிசையிலும் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பாக்ஸிங் டே டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன். செஞ்சூரியன் பாக்ஸிங் டே மோதலில் பாகிஸ்தானுக்கு எதிரான புரோட்டியாஸ் வெற்றியில் அவர் எடுத்த ஏழு விக்கெட்டுகள் காரணமாக பந்து வீச்சு தரவரிசையில் ஆறு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
ஜான்சன் 800 மதிப்பெண்களைத் தாண்டியது இதுவே முதல் முறை ஆகும்