வடமாகாணத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறியுள்ளனர் என பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
2024 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 3499 வர்த்தகர்களிற்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக 02 கோடியே 58 இலட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் அப்துல் லத்தீவ் ஜக்வார் சாதிக் தெரிவித்தார்.
குறிப்பாக வடமாகாணத்தில் 3445 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் 3361 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வவுனியா மாவட்டத்தில் 744 சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் 903 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 946 வர்தகர்களிற்கு வவுனியா நீதிமன்றத்தின் ஊடாக 57 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரிசி விற்பனை தொடர்பான வடமாகாணத்தில் 774 விசேட சுற்றுவளைப்புக்கள் மேற்கொள்பட்டுள்ளதுடன், வவுனியா மாவட்டத்தில் 126 விசேட சுற்றிவளைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.