கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் ஆதவன் விளையாட்டுக்கழகம் நடாத்திய சுழற்சி மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டியில் புதியபாரதி விளையட்டுக்கழகம் சம்பியனானது.
மேற்படி போட்டியானது 29-12-2024 ஆம் திகதி பி. ப 6.00 மணிக்கு ஆதவன் விளையாட்டு கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டார்.
5 சுற்றுக்களை கொண்ட போட்டியில் புதியபாரதி எதிர் குறிஞ்சி அணிகள் இறுதிப்போட்டியில் போட்டியிட்டு 3-0 என்ற நேர் செற் அடிப்படையில் புதியபாரதி அணி வெற்றி பெற்றது.
சுழற்சி முறையிலான 40 வது போட்டியாகவும் இறுதிப்போட்டி அமைந்திருந்தது.
இப்போட்டித்தொடரில் தொடராட்ட நாயகனாகவும் ஆட்ட நாயகனாகவும் நிசாந்தன் ( புதியபாரதி)
சிறந்த செட்டராக ஆக மதுசனும் (புதியபாரதி) தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதிக்கவில்லையென்கிறார் அமைச்சரவை பேச்சாளர்