யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சுண்ணக்கல் அகழ்ந்த திருகோணமலைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது
ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டும் இதனை கட்டுப்படுத்த எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தென்மராட்சி பகுதிகளில் உள்ள தனியார் காணிகளிலும் அரச காணிகளிலும் சுண்ணக்கல் உள்ளிட்ட கனிமங்கள் சட்டவிரோதமான முறையில் அகழ்ந்து எடுத்து செல்லப்படுகிறது.
தென்மராட்சியில் குறிப்பாக மந்துவில், வேம்பிராய் மண், சுண்ணக்கல், போன்றவற்றை அகழ்ந்து விற்பனை செய்யப்படுகின்றது
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர், சுண்ணக்கற்களை திருகோணமலையில் உள்ள சீமெந்து உற்பத்தி நிலையத்திற்கு விற்பனை செய்து வருகின்றார்.
யாழ்ப்பாண குடாநாட்டிலுள்ள நீர் வளத்தை சேமிக்க பிரதான அச்சாணியாக சுண்ணக்கல் காணப்படுகின்றது.
இது தொடர்பில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்து சொல்லியும் அவர்கள் பாராமுகமாக இருப்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
ஆனாலும் இன்னமும் அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதனால், தமது பகுதியை காப்பாற்ற உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.