Tuesday, December 24, 2024
Homeவிளையாட்டுஇலங்கையை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்....

இலங்கையை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்….

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் Charith Asalanka அதிகபட்சமாக 59 ஓட்டங்களை பெற்றதுடன், Kamindu Mendis 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Romario Shepherd 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர்  180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Brandon King அதிகபட்சமாக 63 ஓட்டங்களையும், Evin Lewis 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இங்கை அணி சார்பில் Matheesha Pathirana 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி 03 போட்டிகள் கொண்ட இந்த T20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments