நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு பல வருடங்களின் பின்னர், தடைகள் தளர்த்தப்பட்டு முதல் தொகுதி வாகனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
டொயோட்டா லங்கா தனியார் நிறுவனம் இதுவரை பஸ்கள் மற்றும் வேன்கள் உட்பட 26 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது.
இதேவேளை, எதிர்காலத்தில் ஜனாதிபதியை சந்தித்து வாகன இறக்குமதி தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.
இதனால் மீண்டும் டொலர் நெருக்கடி ஏற்படுமா என பலரும் ; சந்தேகம் வெளியிட்டுள்ளனர்