கனேடிய மத்திய அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய பண்டிகை காலத்தில் மக்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வார இறுதி நாட்கள் தொடக்கம் இந்த வரிச்சலுகை அதாவது வரி விடுவிப்பு அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதிகளுக்கு இந்த வரிசலுகை அமுலில் இருக்கும்என தெரிவிக்கப்படுகின்றது
இதன் மூலம் நாட்டில் வரி செலுத்துவோர் சுமார் 1.5 பில்லியன் டொலர்கள் வரையில் சேமிக்க முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்த வரி விடுமுறை திட்டம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை மளிகை பொருட்களான பழங்கள், மரக்கறிகள், பால் உற்பத்திகள், இறைச்சி வகைகள், கால்நடை உற்பத்திகள், முட்டை போன்ற பொருட்களுக்கு பெறுமதி சேர்வரி அளவீடு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாண்ட்விச், சலாட் வகைகள், சமைத்த உணவுகள், பேக்கரி உற்பத்திகள் போன்றவற்றிற்கான வரிகளும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்ஹகோல் அல்லாத பான வகைகளுக்கான வரிகளும் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.