Tuesday, December 24, 2024
Homeஉள்ளூர்விலாசம் காட்டிய வவுனியா மாணவன் தேசிய ரீதியில் சாதனை

விலாசம் காட்டிய வவுனியா மாணவன் தேசிய ரீதியில் சாதனை

தேர்தலில் வாக்களிக்கும் இலத்திரனியல் இயந்திரத்தை கண்டுபிடித்து வவுனியா மாணவன் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார்

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

அகில இலங்கை ரீதியில் இடம்பெறும் ரொபோட்டிக் தொடர்பான புத்தாக்கப் போட்டிக்காக 14 வயதுடைய சி.கபிலாஸ் என்ற மாணவன் இலத்திரனியல் முறையில் வாக்களிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்துள்ளார்.

மாணவன் தயாரித்த இயந்திரத்தில் வாக்காளர்கள் தமது கடவுச் சொல்லை அதாவது வாக்கு சீட்டு இலக்கத்தை செலுத்தி கைவிரல் அடையாளத்தை பதிவு செய்து விரும்பிய கட்சிக்கு வாக்களிக்க கூடியதாக குறித்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

போலியான முறையில் மீண்டும் ஒருவர் வாக்களிக்க முயன்றால் அதனை அந்த இயந்திரம் அதனை நிராகரித்து சட்ட விரோத செயற்பாடு என அதிகாரிகளுக்கு உடனேயே வெளிப்படுத்தும்.

மொத்த வாக்குளை எண்ணி கணக்கிடும் வசதியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது
வவுனியா மாவட்ட புத்தாக்க போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளதுடன், மாகாணத்தில் இரண்டாம் இடத்தையும், தேசிய ரீதியில் முதலாம் இடத்தையும் கபிலாஸ் என்ற மாணவனின் கண்டுபிடிப்பு பெற்றுள்ளது.

இது குறித்து சி.கபிலாஸ் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் செலவு அதிகமாக காணப்பட்டதாக எமது பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அதனை குறைக்கும் வகையில் ஏதாவது செய்ய முடியுமா எனசிந்தித்தேன். அதன் விளைவே இந்த இயந்திரம்.

அத்துடன், குறித்த இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்தித்தை மேலும் மெரு கூட்டி எதிர்காலத்தில் தேர்தல்களில பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.
பாடசாலையின் மாணவர் பாராளுன்ற தேர்தலில் இந்த இயந்திரத்தை பயன்படுத்தினர்.

தேர்தல் செலவுகளை குறைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ள ஜனாதிபதி எனது இக் கண்டு பிடிப்பை பார்வையிட்டு, செலவு குறைந்த முறையில் வாக்களிக்க கூடியதாக இவ்வாறான இயந்திரத்தை மெருகூட்டி பயன்படுத்த தனக்கு உதவ வேண்டும எனவும் கபிலாஸ் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments