Monday, December 23, 2024
Homeசெய்திகள்வடக்கு விஜயத்தில் மறைமுக நிகழ்ச்சி நிரல் எதுவுமில்லை - சீன தூதுவர்

வடக்கு விஜயத்தில் மறைமுக நிகழ்ச்சி நிரல் எதுவுமில்லை – சீன தூதுவர்

வடபகுதிக்கு நாங்கள் வருவதில் எமக்கு எந்தவித மறைமுக நிகழ்ச்சியிலும் இல்லை’ என்று யாழ்ப்பாணம் வந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார்.

இலங்கையின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனத் தூதுவருக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடனான சந்திப்பொன்று நடைப்பெற்றது அதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளாhர்

இங்கு தொடர்ந்து உரையாற்றிய சீனத் தூதுவர்,

பொது தேர்தலில் பின்னர் வடபகுதியில் சாதகமான ஒரு நிலை உருவாகியிருக்கின்றது என தெரிவித்துள்ள சீன தூதுவர் முன்னேற்றமும் காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்

ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் வீடமைப்புக்கான பொருத்து வீடுகள் மற்றும் மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் போன்றவற்றை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளாhர்.

யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற மூன்று தீவுகளில் மின் சக்தி திட்டங்களை உருவாக்குவதற்கான யோசனைகளை சீன நிறுவனம் ஒன்று முன் வைத்திருந்தது.
அதற்கான அங்கீகாரமும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

ஆனால் பின்னர் இந்த ரத்து செய்யப்பட்டது. சீனாவை பொறுத்தவரையில் இது ஒரு மோசமான முன்னுதாரணமாக இருக்கின்றது.

வடபகுதியில் செயல்படுத்தக்கூடிய பல திட்டங்கள் இருக்கின்றன.
இதற்கான சட்ட ரீதியான வரையறைகளை மேற்கொள்வதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று அவசியம்.

இவ்வாறான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படுமாக இருந்தால், பெரிய நாடு என்ற வகையில் சீனா தான் அதனால் பயன்பெறும் என சிலர் கூறுகிறார்கள்.

அதாவது அது சீனாவுக்கு சாதகமாக அமையும் என்பது சிலருடைய கருத்து. ஆனால் அவ்வாறான கவலை அவசியமற்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளாhர்

சீனாவின் கடன் பொறி தொடர்பாகவும் சிலர் கூறியுள்ளார்கள். அதுவும் தவறான ஒரு தகவல். இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது நாம் பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டி உள்ளது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் முதலாவதாக கைச்சாத்திட்ட நாடாக சீனாவே இருந்தது’ என்றும் சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments