மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி.எஸ் அபேகோனும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று கண்டியில் உள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்றது.
இரு நாட்டினதும் நட்புறவு, கல்வி கலாச்சார, சமய, விஞ்ஞான தொழில் நுட்பத்துறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், இலங்கையில் தென்கொரியா செய்துள்ள முதலீடுகள் தொடர்பாகவும்,கொரியாவில் இலங்கையருக்கான தொழில் வாய்ப்பு தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.