Wednesday, December 25, 2024
Homeசெய்திகள்முன்னாள் ஜனாதிபதி ரணில், முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, உட்பட 18 முன்னாள் அமைச்சர்களிடம் வாக்குமூலம்...

முன்னாள் ஜனாதிபதி ரணில், முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, உட்பட 18 முன்னாள் அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது

அரச வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காக, அப்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 18 அமைச்சர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையில் அங்கம் வகித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான டிரான் அலஸ், மஹிந்த அமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, நிமல் சிறிபால உள்ளிட்ட அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய 18 பேரிடம் வாக்குமூலம் பெறுவது அவசியம் என நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, மாளிகாகந்த நீதிமன்றில் அமைச்சரவையில் அங்க் வகித்த அமைச்சர்களை விசாரக்க வேண்டுமென கோரியதையடுத்து, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments