ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் 3 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் விராட் கோலி சமீப காலங்களாக அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவுட் ஆகியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து ரோகித் கூறியதாவது:-
நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர்.
அவர் ரன்களை சேர்க்கும் வழியை நிச்சயம் கண்டுபிடிப்பார்.
மேலும் யார் எங்கே பேட் செய்வார்கள் என்பது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என ரோகித் தெரிவத்துள்ளாhர்
வலை பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு தான் நலமுடன் உள்ளதாக ரோகித் பதிலளித்தார்.
இதையும் படியுங்கள்>துருக்கியில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் பலி