அவர் மும்பையை அடுத்த தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வினோத் காம்ப்ளியின் உடல் நிலை குறித்து அவரது நண்பர் மார்கஸ் கௌடோ தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி வினோத் காம்ப்ளி அபாய கட்டத்தை கடந்து விட்டார். எனினும், அவர் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.
காம்ப்ளியின் உடல்நிலை நன்கு முன்னேற்றம் அடையும் வரை கிட்டத்தட்ட ஒருமாத காலத்திற்கு அவருக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
வினோத் காம்ப்ளியின் மருத்துவ செலவுகளை வேறொருவர் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
‘காம்ப்ளி தற்போது நலமாக உள்ளார்.
அவர் சிறுநீர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று அவரை மருத்துவமனையில் சந்தித்தேன்.
அவருக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதால் ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கச் திட்டமிடப்பட்டுள்ளது.
அவருடைய சிகிச்சைக்கு ஒருவர் பணம் செலவழிக்கத் தயாராக இருக்கிறார்.
பிறகு ஏன் சிகிச்சை அளிக்காமல் இருக்க வேண்டும்?’ என்று மார்கஸ் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்>நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி மிகச்சிறந்த வீரர்: ரோகித் சர்மா
https://www.youtube.com/@pathivunews/shorts