இலங்கையும் சீனாவும் ஒருவருக்கொருவர் அவசியமான உதவிகளை வழங்குகின்ற, நீண்டகால நட்பை கொண்டுள்ள பங்காண்மை நாடுகள் என சீன வெளிவிவகாரப் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கான அஉத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
அதனையடுத்து எதிர்வரும் ஜனவரி மாதம் அவர் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்
இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கையுடனான உறவு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே சீன வெளிவிவகாரப் பேச்சாளர் மாவோ நிங மேற்கண்டவாறு தெரிவித்தார்.