சீனாவின் 2024 திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்கு சொந்தமான பீஸ் ஆர்க் என்ற மருத்துவமனை கப்பலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார்.
பீஸ் ஆர்க் என்ற இந்த கப்பல் டிசம்பர் 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
2024 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 27 வரை இலங்கையில் மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகளைகளை வழங்குகின்றார்கள்
இதன் ஊடாக இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கும் பொது சுகாதாரத் துறைக்கு ஆதரவளிப்பதற்கும் இத்தகைய முயற்சிகளின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் இந்த கப்பலின் பணியின் முக்கியத்துவத்தை சீனத் தூதுவர் வலியுறுத்தினார்.
கப்பலில் உள்ள நவீன வசதிகள் மற்றும் சேவைகள் குறித்து கப்பலின் மருத்துவக் குழுவினர் விளக்கமளித்தனர்.