Thursday, December 26, 2024
Homeசெய்திகள்முன்னாள் ஜனாதிபதிகளின் திருகுதாளங்களங்கள் வெளிவருமா?

முன்னாள் ஜனாதிபதிகளின் திருகுதாளங்களங்கள் வெளிவருமா?

2005 தொடக்கம் 2024 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதயில் ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தினால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய குருநாகல் மாவட்ட உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சுசில் பிரேமஜயந்த, பியல் நிசாந்த ஆகியோர் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன 100 இலட்சம் ரூபாவும்

கெஹெலிய ரம்புக்வெல்ல 110 இலட்சம் ரூபாவும்,

டி. மு ஜயரத்ன 300 இலட்சம் ரூபாவும்

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது

மக்கள் நிதியைப் பாதுகாப்பதற்கான சட்டத்தரணிகள் அமைப்பினால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments