உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அரசியல் தலைவர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் என பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் சிஎஸ்கே வீரருமான எம்.எஸ்.தோனி கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.
அதில் தோனி கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து தனது மனைவி மற்றும் மகளுடன் கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை அவரது மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் தோனி தாத்தா வேடம் அணிந்து உள்ள புகைப்படத்தை சிஎஸ்கே அணியும் தங்களது அதிகாரபூர்வ சமூக வலைதளங்களில் என பதிவிட்டுள்ளது.
தோனி தாத்தா வேடமணிந்து உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்>குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ!
https://www.youtube.com/@pathivunews/shorts