இளையோருக்கான தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் வு.தரனிதரன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்
கடந்த 18,19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இளையோருக்கான குத்துச்சண்டை போட்டி கண்டியில் நடைபெற்றது.
இதன்போது 69 – 71 மப எடைப்பிரிவில் போட்டியிட்ட தரனிதரன் இறுதிப்போட்டியில் கண்டி சென் சில்வஸ்ரார்ஸ் கல்லூரி மாணவனை எதிர்கொண்டு இரண்டாம் இடத்தினைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்