Thursday, December 26, 2024
Homeஉள்ளூர்சுனாமியால் காவுகொள்ளப்பட்டோருக்கான நினைவேந்தல் – முல்லைதீவு

சுனாமியால் காவுகொள்ளப்பட்டோருக்கான நினைவேந்தல் – முல்லைதீவு

ஆழிப்பேரலையால் அடித்துச்செல்லப்பட்ட மக்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) காலை 8.05 மணியளவில் புதுக்குடியிருப்பில் உணர்வு பூர்வமாக நினைவுகூறப்பட்டது

வன்னிகுறோஸ் மற்றும் சுனாமி நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது

சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள , புதுக்குடியிருப்பு ஐயனார் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

பொது சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றினர்.
நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments