Claim: ஈஃபிள் டவரில் தீவிபத்து.
Fact: வைரலாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் AI மூலமாக எடிட் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஈஃபிள் டவரின் Elevator ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவால் அலாரம் அடித்ததைத் தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
வைரலாகும் செய்தியில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தை ஆராய்ந்தபோது FreePIK என்கிற புகைப்படங்களுக்கான இணையதளத்தில் AI Generated என்கிற தலைப்பில் பயன்பாட்டிற்காக இப்புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
இந்த வலைத்தளத்திலேயே AI மூலமாக உருவாக்கப்பட்டு இடம்பெற்றிருக்கும் பல்வேறு ஈஃபிள் டவர் தீ படங்களும் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
ஈஃபிள் டவரில் தீ என்று பரவும் வீடியோ கடந்த ஜூலை 2023ஆம் ஆண்டு Gor_cgi என்கிற கிராபிக் கலைஞரால் உருவாக்கப்பட்டு அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்«சுனாமியால் காவுகொள்ளப்பட்டோருக்கான நினைவேந்தல் – முல்லைதீவு