யாழ்ப்பாணத்தை பாதித்துள்ள எலிக்காய்ச்சல் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளதாக வடக்கில் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரே நாளில் மீண்டும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் யாழ்.போதனா வைத்தியசாலையிலும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியில் எலிக்காய்ச்சலை ஒழிப்பதற்கு சுகாதார அதிகாரிகள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்த போதிலும், எலிக்காய்ச்சல் தொற்றின் அதிகரிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
எவ்வாறாயினும், வடக்கு பிராந்தியத்தில் உள்ள வைத்தியசாலைகளில் எலிக்காய்ச்சலால் ஒன்பது நோயாளிகள் உயிரிழந்துள்ளதுடன், 234 பேர் இந்நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு பிரதேசத்தில் எலிக்காய்ச்சல் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகள் இன்றும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இதையும் படியுங்கள்>வெள்ளத்தினால் சேதமடைந்த சுமார் 80,000 ஏக்கர் விளைநிலங்கள்!