அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் எதுவும் இல்லை என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே அண்மையில் தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்களில் பேசிய அவர்,
டிசம்பர் 23 முதல் ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட மீதமுள்ள இராணுவ அதிகாரிகளை பொது பாதுகாப்பு அமைச்சு திரும்பப் பெற்ற நடவடிக்கையையும் சாடிப் பேசினார்.
அத்துடன், அனுபவம் வாய்ந்த மற்றும் ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்களுக்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை மட்டுமே நியமிக்கும் நடவடிக்கையை கமகே விமர்சித்ததுடன்,
அச்சுறுத்தல்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இது போதுமானதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையிலேயிலேயே பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சனில் வட்டகல இவ்வாறு அறிவிப்பை விடுத்துள்ளதுடன்,
இது தொடர்பான பாதுகாப்பு நிலைமைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்>யாழில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்!
https://www.youtube.com/shorts/eKhbdLG85VU?feature=share