ஜூலை 2ம் திகதி ஆடம்பர தொடர்மாடியொன்றிலிருந்து இரண்டு மாணவர்கள் விழுந்து தற்கொலை செய்தார் என தகவல் தெரிவித்த போதிலும் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான ஜிவொன் ஜொரொ சிங்கின் பெற்றோர் அதனை நிராகரித்துள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் பல தவறாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது ஏனையவர்களிற்கு உதவும் ஜிவோன் எனும் மாணவனின் மனோபாவமே தொடர்மாடியியிலிருந்து விழுந்து அவர் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்தது.
அன்றைய தினம் தனது உதவி தேவையாகயிருந்த ஒருவருக்கு ஜிவோன் உதவி செய்ய முயன்றார். அது அவரது இயல்பான மனோபாவம்.
இரக்கம் மிகுந்த துரதிஸ்டவசமான செயற்பாட்டின் போது அவரது உயிர் பறிக்கப்பட்டது.
ஜிவோன் தற்கொலை செய்யவில்லை வாழ்க்கை மீதான அவரது அளவற்ற காதலும் எதனையும் சாதகமான விதத்தில் சிந்திக்கும் மனோபாவமும் அவரது குணாதிசயங்களாக காணப்பட்டன நாங்கள் அவரது நினைவுகளை பாதுகாப்பதற்கும் அவரது குணாதிசயம் புரிந்து கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கும் முயல்கின்றோம்.
அவர் சமீப மாதங்களில் துன்பமான அனுபவங்களில் இருந்து மீண்டுவந்தார் அவரால் அதிலிருந்து மீண்டெழ முடிந்த போதிலும் இது சாதாரணமாக எடுக்கப்படவேண்டிய விடயம் இல்லை இதற்கு தீர்வை காண்பதற்கான தீவிர முயற்சிகள் அவசியம்.
அவன் ஒவ்வொரு நாளையும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் அணுகினான் தன்னை சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கையை முழுமையாக தழுவும் விதத்தில் உத்வேகத்தையளித்தான்.
அவன் கவலைகள் அற்ற சிறுவன் அவன் மிகவும் உயிர்த்துடிப்புள்ளவன் அவன் இயல்பாகவே மிகுந்த புத்திசாலி ஏ தர மாணவன். எந்த இடத்தையும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றக்கூடிய சிரிப்புடையவன்.
அவன் தான் நேசித்த அனைத்து விடயங்கள் குறித்தும் அர்ப்பணிப்பு மிக்கவன் உடற்பயிற்சி கூடத்தில் சிறப்பாக செயற்பட்டான் அனைவரையும் உற்சாகமாக செயற்துடிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டான்.
பாடசாலையில் தன்னை சுற்றியுள்ளவர்களிற்கு உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் உதவுவதில் எப்போதும் முன்னின்றான் தனது வாழ்வின் இறுதிவரை அது குறித்து அக்கறையுடன் இருந்தான்.
பாடசாலையில் அடாவடித்தனத்தை எதிர்கொண்ட போதிலும் அவன் கல்வியில் மிகச்சிறந்தவனாக விளங்கினான்.சாதரண தரப்பரீட்சைக்கு தன்னை தயார்படுத்தி வந்தான்.
கல்வியில் கவனம் செலுத்துமாறு நான் அவனிற்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவேண்டிய தேவையிருக்கவில்லை.
அவன் பாடசாலையில் அடாவடித்தனத்தை எதிர்கொண்டவேளை அது குறித்து ஆசிரியர்களிற்கு தெரிவித்தான்.உதவியை கோரினான்.
இந்த வருடமே அவன் பாடசாலையில் எதிர்பாரத கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டான்.
ஆனால் அவன் அதிலிருந்து மீண்டுதனது வாழ்க்கையை தொடர்ந்தான்.
பாடசாலைகளில் காணப்படும் அடாவடித்தனங்களிற்கு தீர்வை காண்பதற்கு பாடசாலை நிர்வாகங்கள் முன்வரவேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் இதனை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகின்றது.
மாணவர்களது உடல் உள பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என தெரிவித்துள்ளனர்.