யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து யாழ் மாவட்டத்திற்கான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
முதலாவது பேருந்து இன்று புதன்கிழமை (13) காலை 8.30 மணிக்கு வாக்குப் பெட்டியை ஏற்றியவாறு புறப்பட்டது.
இதன்போது கண்காணிப்பில் யாழ். தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும்
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரியபண்டார ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.