கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘பியுமா’ என்று அழைக்கப்படும் பியூமி ஹஸ்திக என்பவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (13) புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான ‘குடு சலிந்து’ என்று அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக என்பவரின் முக்கிய உதவியாளர் ஒருவர் ஆவார்.
துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட
பியுமா’ கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி அன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது