Wednesday, December 25, 2024
Homeஉள்ளூர்சுன்னாகம் பொலிஸாரின் காடத்தனம் தொடர்பில் விசேட பொலிஸ் குழு விசாரணை ஆரம்பித்துள்ளது?

சுன்னாகம் பொலிஸாரின் காடத்தனம் தொடர்பில் விசேட பொலிஸ் குழு விசாரணை ஆரம்பித்துள்ளது?

சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்தினையடுத்து பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்தாக யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜருள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தெரியவருவதாவது

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட பகுதியில் நேற்று (09) வேன் மற்றும் மோட்டார் வண்டி விபத்துக்குள்ளானது

அதன் பின் வாகன சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தை சிவில் உடையில் நின்ற பொலிஸார் பரிசோதிக்க முற்பட்டுள்ளனர்.

அவ்வாறு சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்ட சிவில் உடை பொலிஸார் மது போதையில் இருந்ததால் சாரதி அவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை கொடுக்க மறுத்துள்ளார்

சீருடையுடன் பொலிஸார் வந்த பின்னர் சாரதி அனுமதிப்பத்திரத்தை கையளிப்பதாக சாரதி சிவில் உடை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சாரதிக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது

கணவர் தாக்கப்படுவதனை தடுக்க சென்ற சாரதியின் மனைவியையும் பொலிஸார் தாக்கி உள்ளனர்.

அத்துடன் அவரின் கையில் இருந்த அவர்களின் இரண்டு மாத குழந்தையை பொலிஸார் தூக்கி எறிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்பாக மக்கள் கூடியமையால் பதட்டம் ஏற்பட்டது. சூழ்நிலை காணப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் (10) யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜருள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிளும் வேன் ஒன்றும் காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தினையடுத்து, வாகனம் அவ்விடத்தில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்டவேளை, சிவில் உடையில் நின்ற பொலிஸார் வாகனத்தை வழிமறித்து, சாரதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தை கேட்டுள்ளனர்.

சிவில் உடையில் உள்ளவர்களுக்கு தான் சாரதி அனுமதிப் பத்திரத்தினை தர மாட்டேன் என கூறி தர்க்கம் செய்த நிலையில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்

விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும் கைகலப்பில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க அவர்களின் உத்தரவில், விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ் பிராந்திய பொலிஸ் அத்;தியட்சகர் தெரிவித்துள்ளார்

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட குழுவினரால் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments