Tuesday, December 24, 2024
Homeஉலகம்டிக்டொக் கனடாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுருத்தல்- டிக்டொக் நிறுவனங்களுக்கு தடை.

டிக்டொக் கனடாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுருத்தல்- டிக்டொக் நிறுவனங்களுக்கு தடை.

 

தேசிய பாதுகாப்பை மேற்கோள் காட்டி, சீனாவுக்குச் சொந்தமான டிக்டோக் அலுவலகங்களை மூடுவதற்கு கனடா உத்தரவிட்டது.

ஆயினும் கனேடியர்கள் குறுகிய காணொளி செயலியினை பயன்படுத்தவும் அல்லது பதிவேற்றம் செய்வதற்கும் செயல்களுக்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லை.

கனடாவின் பாதுகாப்பு, உளவுத்துறை, பிற அரசாங்க பங்காளிகளின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஒட்டாவா கடந்த ஆண்டு கனடாவில் தனது வணிகத்தை முதலீடு செய்வதற்கும் விரிவாக்குவதற்கும் டிக்டோக்கின் திட்டத்தை மதிப்பாய்வு செய்யத் தொடங்கியது.

இதனிடையே டிக்டோக்கின் பிரதிநிதி ஒருவர், தமது நிறுவனம் இந்த முடிவை எதிர்த்துப் போராட விரும்புவதாகக் தெரிவித்துள்ளார்

டிக்டோக்கின் கனேடிய அலுவலகங்களை மூடுவது மற்றும் நூற்றுக்கணக்கான ஊதியம் பெறும் உள்ளூர் வேலைகளை அழிப்பது எவருக்கும் சிறந்தது அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இந்த உத்தரவுக்கு எதிராக நீதிமன்றை நாடவுள்ளோம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments