முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு பல்வேறு காரணங்களால் தேர்தலில் போட்டியிட கட்சி அனுமதிக்கவில்லையென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து ஏற்புடையதல்லவென தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையினர் தெரிவித்துள்ளனர்
ஆகவே சுமந்திரன் அவரது கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை செயலாளர் சூசையப்பு ஜஸ்ரின் துரம் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் அலுவலகத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தானாகவே தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியதாக கட்சியின் மன்னார் கிளையினர் குறிப்பிட்டுள்ளனர்
சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பாக ஊடகங்கள் ஊடாக விடுத்த கருத்தை சுமந்திரன் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
அரசியல்வாதிகள் தமது நலனையும் கருத்தில் கொண்டே அரசியல் செய்வார்கள்.
அது கட்சியின் நலனுக்கானதா? என்பதை காலப்போக்கில் அறிந்து கொள்ள முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை செயலாளர் சூசையப்பு ஜஸ்ரின் துரம் தெரிவித்தார்.