ஒன்றாறியோ மாகாணத்தில் ஒரிலியா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் 26 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்
பலியான நபரை கைது பொலிஸ் அலுவலர் கைது செய்ய முயன்ற போது அந்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது
இதன் போது குறித்த பொலிஸ் உத்தியோகர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் சந்தேக நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.