தென் கொரியாவில் சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சீன வீரரான சி.யு.ஜென் போட்டியிட்டார்
முதல் செட்டை 21-17 என கைப்பற்றிய கிரண் ஜார்ஜ், இரண்டாவது செட்டில் 19-21 என தோல்வியடைந்தார்
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கிரண் ஜார்ஜ், 21-17 என வெற்றிக்கொண்டார்
இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடம் நீடித்தது.
இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள கிரண் ஜோர்ஜ் காலிறுதிப் போட்டியில் ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதவுள்ளார்.