கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது சொந்த செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்
நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் நாட்டு மக்கள் பலரை இழந்துவிட்டோம்.
இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை மற்றும் சம உரிமையின்மை ஆகிய காரணிகளால் யுத்தம் தோற்றம் பெற்று பலரையும் காவு கொண்டது
இந்த யுத்தத்தால் தமிழ் மக்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
யுத்தம் மௌனித்து 15 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் தமிழ் மக்கள் யுத்தத்தின் வடுக்களில் இருந்து இருந்து மீளவில்லை
தமிழ் மக்கள் யுத்தத்தால் உயிரிழந்த தமது உறவுகளை நினைத்து கண்ணீர்விடுவதற்கு கூட இந் நாட்டில் முடியாதுள்ளது
பொதுவான நினைவுத்தூபி ஒன்றை அமைத்து யுத்தத்தில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கம் அனுமதி வழங்கும் பட்சத்தில் எனது சொந்த செலவில் பொதுவான நினைவுத் தூபியை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அங்கஜன் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நல்லிணக்கத்தை மலரச் செய்வதன் ஊடாக சிறந்த ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்க முடியும் என்றார்.