நாடாளுமன்ற தேர்தல் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவைத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் திகதியானது அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்குமாறு கோரி எச்.எம். பிரியந்த ஹேரத்தினால் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இன்று இந்த மனு பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில்; விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
தேர்தல் சட்டத்தின் பிரகாரம் பொதுத் தேர்தலுக்கான திகதி சரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் சட்டமா அதிபர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் வாதத்ததை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவுட்டுள்ளனர்.