சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தேவையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது.
இன்று (04) கங்கொடவில நீதிமன்றில் ஆஜராகியிருந்த அவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவுடுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான பொலிஸில் நிலையத்தில் வாக்குமூலத்தை வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது கைது செய்யப்பட்டார்.