முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம்அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது முழு வரலாற்றையும் வெளியே சொல்லவேண்டிய நிலையை ஏற்படுத்த வேண்டாமென வன்னி மாவட்ட சுயேட்சை வேட்பாளரான எமில்காந்தன் தெரிவித்துள்ளார்
வவுனியாவில் அமைந்துள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பேதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வன்னி தேர்தல் மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது ஆதரவாளர்கள் தமது சின்னமான கோடாலிச் சின்னத்தை தொடர்ச்சியாக விமர்சிக்கிறார்கள் என எமில்காந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரின் வரலாற்றை நான் நன்கு அறிந்தவன்.
பாராளுமன்றம் சென்ற காலத்திலிருந்து இன்று வரை அத்தனையும் நான் அறிந்தவன்.
குறித்த இருவரும் மக்களை பிழையாக வழிநடாத்தி என் மீது சேறு பூச வேண்டாமென எமில்காந்தன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நிறுத்தாவிட்டால் அடுத்த பத்திரிகையாளர் மாநாட்டில் நேரடியாக செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் பற்றிய உண்மைகளை சொல்ல வேண்டிய நிலை ஏற்படுமென எமில்காந்தன் எச்செரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கத்திடம் லஞ்சமாக பணம் பெற்றுக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதாக சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக சொல்லியிருந்தார்.
அதனை அடைக்கலநாதன்; மறுப்பாரா என எமில்காந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்