பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (4) காலை மன்னாருக்கு விஜயம் செய்தார்.
பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் கூட்டத்தில் பரப்புரை செய்யவே அங்கு சென்றார்
மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்
இதன் போது ஜே.வி.பி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அடங்கலாக சுமார் 500க்கும் மேற்பட்டவர் கலந்துகொண்டனர்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு மன்னார் நகரப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அத்துடன் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற மக்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது