Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தன் மீது அவதூறு பரப்பும் வகையிலான கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வெளியிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று (3) மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மதுபானசாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதனை அதை தான் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டதாகவும் தனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் கூறியதாக சால்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான உதவிகளை கோரிய போது அவர்களின் தேவைகள் நிமித்தம் ரணிலுடன் சந்திப்புக்களை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சந்தித்தவர்களில் தனிப்பட்ட பழக்கத்தின் காரணமாக யாரும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி மதுபானசாலைகள் அமைப்பதற்கான அனுமதியை பெற்றிருந்தால்; அதற்கு தான் பொறுப்பாக முடியாது என சார்லஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments