இலங்கை மற்றும் இந்தியாவின் நட்புறவை மேம்படுத்த இந்திய தூதரகத்தினால் திருகோணமலையிலுள்ள 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் இந்தியா வழங்கி வைத்துள்ளது.
திருமலை கடற்றொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் ரவிக்குமார் தலைமையில் நேற்று (03) திருக்கடலூர் மீனவர்கள் வர்த்தக சங்க கட்டடத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்து கொண்டார்.