கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆட்டோவில் சென்ற நபரை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 16ஆம் திகதி கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு ஆட்டோவில் பயணித்த நபரை காரில் பயணித்த இனந்தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றனர்
இந் நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்த சந்தேகநபர்கள் பயணித்த காரின் சாரதியான 35 வயதுடைய புளூமண்டல் பகுதியைச் நபரொருவர் கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
சாரதியிடம் நடத்திய விசாரனைகளின் அடிப்படையில்; துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் நேற்று (31) மாலை வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். .
மேலதிக விசாரணைகளின் போது, சந்தேகநபர் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா