யாழ்ப்பாணம் பலாலி வீதி – வசவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 ஆண்டுகளுக்கு பின் பொது மக்கள் பாவனைக்காக இன்று (01) காலை 6.00 மணி தொடக்கம் அனுமதிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வசாவிளான் சந்தி அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 கிலோமீற்றர் வரையான வீதி மக்கள் பாவனைக்காக இராணுவத்தினர் இன்று திறந்து வைத்துள்ளனர்
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பிரதேசம் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் தலையீட்டையடுத்து மக்கள் பாவனைக்கு இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்
பலாலி வீதி – வசவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதியில் இராணுவத்தினர் ஏற்படுத்திய வீதித்தடைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் விலக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது