ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குன்லே அடனி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
இலங்கை அரசியல் களத்தில் மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அதிகரிப்பதனை அடனி பாராட்டியுள்ளார்
ஆண் – பெண் சமத்துவம் மற்றும் மகளிரை பலப்படுத்துவதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்
இந்த கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
ஆண் – பெண் சமத்துவம், பெண்களின் பொருளாதார செயற்பாடுகள்,
வன்முறை கையாள்கை
பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளின் போஷாக்கை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தினார்.
கல்வி தொடர்பில் பெண்களின் பங்களிப்பு மகிழ்ச்சியான மட்டத்தில் இருக்கின்ற போதும் தீர்மானம் எடுக்கும் தர நிலையில் பெண்களின் தலையீட்டை அதிகரிப்பது அவசியம் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கூட்டாண்மை மற்றும் ஆலோசனை பகுப்பாய்வாளர் அனுஷிகா அமரசிங்க, இலங்கை அரசை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான பணிப்பாளர் திலினி குணசேகர முதலான அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.