தமிழ் மக்கள் 75 வருட காலமாக நியாயமான அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர்
தமிழ் மக்கள் விரும்பிய அரசியல் மாற்றத்திற்கு தெற்கு மக்களின் வகிபங்கு இருக்கவில்லை.
தேசிய மக்கள் சக்தி கூறி ஆட்சி பீடம் ஏறிய பின் அவர்களின் தேர்தல் கால வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக சறுக்க தொடங்கி விட்டது.
ஜேவிபியினர் எதிர்கட்சி ஆசனத்தில் இருந்தபோது பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவது என்ற கோரிக்கையை இணைந்து முன் வைத்தனர்.
பயங்கரவாத தடுப்பு சட்டம் முற்றாக நீக்க வேண்டும் என்ற நிலையிலிருந்த ஜேவிபி தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர், அந்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாது இருந்தால் போதும் என கூறி பயங்கரவாத தடுப்பு சட்டத்தை தொடர்ந்தும் வைத்திருக்க விரும்புகின்றாhர்கள்
தமிழ் சமூகம் கடந்த கடந்த 75 வருடங்களாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உள்ளனர் என சுமந்திரன் தெரிவித்துள்ளாhர்
சமஸ்டி என்ற எண்ணத்தையே இழிவாக பேசி அதனை பழித்து உரைத்துக்கொண்டிருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் சமஸ்டி தான் தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சமஸ்டியை தீர்வாக ஏற்கிறது –எம்.ஏ. சுமந்திரன்
Recent Comments
Hello world!
on