Tuesday, December 24, 2024
Homeவிளையாட்டுமகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 58 ரன்னில் தோற்றது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஹர்மன் பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 3-வது ஆட்டத்தில் இலங்கையை இன்று எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.
அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமாகும்.
இலங்கையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலிவர்மா, தீப்திசர்மா, பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இலங்கை அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 31 ரன் வித்தியாசத்திலும், 2-து போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.
அந்த அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.
இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 19-ல், இலங்கை 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவுஇல்லை.
முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. ஸ்காட்லாந்து 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments