பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதையடுத்து ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், உயிரிழந்த நஸ்ரலாவை தொடர்ந்து ஹிஸ்புல்லா தலைவராக இருந்தவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் தெரிவித்துள்ளார்.