வெளிநாட்டுத் தலையீடின் கீழ் இலரங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி உதைத்து விட்டே பல நாடுகளும் செயற்படுகின்றன.
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிமல் ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் எமது கட்சி வேட்பாளர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.
ஜேவிப்பிக்கு எதிராக தமிழ் மக்களிடம் கூறுவதற்கு எந்த விடயமும் இல்லாத காரணத்தால் ; சர்வதேச விசாரணை என்ற விடயத்தை தமிழ் தலைவர்கள் கையில் எடுத்திருக்கின்றார்கள்.
தமிழ் மக்களை இனவாத ரீதியாகச் சூடேற்றி அதில் குளிர்காய்கின்ற தமிழ்க் கட்சிகள் ஜேவிபி; மீது இனவாத சாயத்தைப் பூசுகின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி இலங்கை நீமன்றங்களிலேயே வழங்கப்படும் என பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.