ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிராகரிக்கக் கூடிய, ஒரு அணியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே உள்ளது என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று (27) மன்னாரில் நடைப்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் ஆகின்றது
வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் நாளாந்தம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்களின் ஒரு போராட்டத்திலாவது ஜே.வி.பி கலந்து கொண்டுள்ளதா? என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார்.
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகின்றது.
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
தனியார் காணிகள் அபகரிப்புக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதில் ஏதாவது ஒன்றிலாவது இந்த ஜே.வி.பியினர் பங்கேற்றார்களா என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஒரு தீர்வில்லாத யோசனை கொண்டு வந்தால் அதை தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள்.
நிராகரித்தால் இனப்பிரச்சினை தொடர்ந்து இருக்கும்,
அப்படி தொடர்ந்தால் இருந்தால் சர்வதேச மட்டத்தில் அரசுக்கு அழுத்தங்கள் வரும் என்கிற ஒரு பிடி தமிழர்களுக்கு இருக்கும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.
அந்த பிடியை இல்லாமல் செய்வதற்கு ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு கொண்டு வரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சைக்கிள் சின்னம் வடக்கு கிழக்கில் குறைந்தது 10 ஆசனங்களை பெற வேண்டும்.
வன்னியில் நாங்கள் 2 ஆசனங்களை பெற்றால் தமிழர் தரப்பு தீர்வு நோக்கி பயணிக்கலாமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்தார்.