முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கியுள்ள சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் அனைத்தும் இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பது மக்களின் வேலையில்லை என தெரிவித்துள்ள அவர் சுற்றுநிரூபங்கள், நாடாளுமன்ற சட்டங்கள் அரசமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளிற்கு விசேட சிறப்புரிமைகள் வழங்கப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.