Tuesday, December 24, 2024
Homeஉள்ளூர்மன்னாரில் ஜாதகம் பார்ப்பதாக வந்த பெண்ணின் திருவிளையாடல்.

மன்னாரில் ஜாதகம் பார்ப்பதாக வந்த பெண்ணின் திருவிளையாடல்.

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் ஜாதகம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் அவர்கள் பணத்தை கொடுக்க குடிக்க நீர் கேட்டுள்ளனர்.
இதன் போது அவர்கள் குடிக்க நீர் கொடுத்து உள்ளனர்.
இதன் போது தான் ஜாதகம் பார்ப்பதாக கூறி பலவந்தப்படுத்தி வீட்டில் இருந்த இருவருக்கு ஜாதகம் பார்த்துள்ளார்.

இதன் போது குறித்த இருவருக்கும் சுய நினைவை இழக்கச் செய்யும் வகையில் மருந்து பூசிய நிலையில் குறித்த இருவரும் சுய நினைவை இழந்த நிலையில் குறித்த பெண் அவர்களில் ஒருவர் அணிந்திருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக் கொடியை அபகரித்துச் சென்றுள்ளார்.

மாலை 5 மணிக்கு பின்னர் அவர்களுக்கு சுய நினைவு திரும்பிய நிலையில் தாலி களவு போன விடயம் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை சந்தேகிக்கப்படும் குறித்த பெண் சிறுவன் ஒருவருடன் குறித்த பகுதியில் வீதியால் சென்ற சி்.சி.ரி.வி. காணொளி கட்சியும் வெளியாகி உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments