Tuesday, December 24, 2024
Homeஉள்ளூர்டெல்லிக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அநுர.

டெல்லிக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அநுர.

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் உயர்மட்ட குழு ஜனவரி மாதத்தில் டெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளது.
இந்த விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளனர்.
இதேவேளை, பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்திற்கான அழைப்பினை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையளிக்க உள்ளதுடன், அவரது விஜயமானது இலங்கையின் சுதந்திர தினத்தன்று இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முழு அளவில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இவ்வாறானதொரு நிலையில், தெற்கு பசிபிக் தீவு நாடான சமோவாவில் இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சி மாநாட்டிலும், ரஷ்யாவில் இடம்பெற்ற பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்க வில்லை.
எனினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது அரச முறை வெளிநாட்டு விஜயமாக எதிர்வரும் ஜனவரி மாதம் டெல்லிக்கு செல்ல உள்ளார்.
இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழு பங்கேற்க உள்ளது.
இலங்கை – இந்திய பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார உறவுகள் குறித்து பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளில் இருதரப்பும் ஈடுபட உள்ளன.
இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்திய திட்டங்கள் குறித்து இலங்கை குழு அவதானம் செலுத்த உள்ளது.
குறிப்பாக ஜனாதிபதி அநுரவின் அரசாங்கத்தின் விமர்சனத்திற்கு உட்பட்டுள்ள அதானி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டம் குறித்தும் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.

எந்தவொரு விலைமனுக்கோரல் இன்றி இந்தியாவின் அதானி குழுமத்திற்கு, மன்னார் காற்றாலை மின்சார திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சாடுகிறது.
எனவே ஜனாதிபதியின் டெல்லி விஜயத்தில் இந்த விடயம் கருத்தில் கொள்ளப்படும்.
மேலும் இந்தியா, சீனா, அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் இராஜதந்திர நடவடிக்கைகள் இலங்கையின் புதிய ஆட்சியில் எவ்வாறு தொடரப்படும் என்பதிலும் இதுவரையில் தெளிவற்ற நிலையே உள்ளது.
அதே போன்று இலங்கையின் கடன் நெருக்கடி, புவிசார் அரசியல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு மூலோபாயத்திலும் தற்போதைய ஆட்சி மாற்றம் தாக்கம் செலுத்துகிறது.
குறிப்பாக இலங்கையின் கடன் மறுசீரமைப்பிலும், அந்நிய செலாவணி இருப்பினும் முக்கிய நாடுகளின் பங்களிப்பு கள் உள்ளன.
இதனால் அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சி ஆட்டமின்றி நகர்த்தப்பட வேண்டுமாயின் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்புகள் இன்றியமையாதவையாகும்.
இத்தகைய சூழலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழு டெல்லி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments