Tuesday, December 24, 2024
Homeஉள்ளூர்அநுர அரசு மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்காது - முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

அநுர அரசு மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்காது – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

தனக்கும் பெரும்பான்மை இருக்கவில்லை அனுரகுமார திசநாயக்கவிற்கும் பெரும்பான்மையில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்படியென்றால் தங்கள் இருவருக்கும் இடையில் என்ன வித்தியாசம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்தால் தன்னை வீட்டிலிருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் தனக்கு பெரும்பான்மையானவர்கள் வாக்களிக்கவில்லை என்பதை தான் ஏற்றுக்கொள்கின்றேன்.

தான் பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி என ரணில் தெரிவித்துள்ளார்
தான் சமையல்எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கோருவதற்காக உங்கள் முன்னால் வந்துள்ளேன்.

நாடு வீழ்ச்சியடைந்த போது பொறுப்பேற்க எவரும் இருக்கவில்லை. சஜித்தும் இல்லை அனுரவும் இல்லை.
பிரதமராவதற்கு எவரும் இருக்கவில்லை.
அந்த சமயம் ஜனாதிபதி பதவியை துறந்தவேளை நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்பட்ட வேளை எவரும் இருக்கவில்லை, தற்போது தலைமைத்துவத்தை கோரும் அனைவரும் தப்பியோடினார்கள்.

நாங்கள் இராணுவத்தை பயன்படுத்தி இந்த நாட்டை காப்பாற்றினோம்.
மக்கள் அனுரகுமாரதிசநாயக்க மூன்று மாதங்களிற்கே பதவி வகிப்பார் என தெரிவிக்கின்றனர்.

தான் அவ்வாறு தெரிவிக்கவில்லை.
அவர் தனது பதவியை தொடரவேண்டும்.
அவரது கட்சியிலிருந்து அரசியல் குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்படுமா தெரியாது.

அவ்வாறான விடயங்களை செய்யக்கூடாது.
ஆனால் அவர்களின் பட்டியலை பார்த்தால் இந்த அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்கும் என நான் நினைக்கவில்லையென ரணில் தெரிவித்துள்ளார்.

ஆகவே நாட்டிற்கு தலைமை தாங்ககூடியவர்களிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
அனுபவசாலிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால் ஜனாதிபதியால் மூன்று வருடங்கள் ஆட்சி செய்ய முடியும்.

அவ்வாறான சூழ்நிலை காணப்படாவிட்டால் நாட்டில் வரிசைகள் யுகம் உருவாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments