Tuesday, December 24, 2024
Homeஉள்ளூர்நாட்டில் எந்தவொரு ஆபத்தான அச்சுறுத்தல்களும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் எந்தவொரு ஆபத்தான அச்சுறுத்தல்களும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுநிலை எயார் வைஷ் மார்ஷல் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்த ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,

நாட்டின் பிரதான சுற்றுலாத்தளங்களை மையப்படுத்திய தாக்குல்கள் நடத்தப்படவுள்ளதாக எமக்கு புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கு ஒக்டோபர் முதல் வாரத்திலேயே தகவல்கள் கிடைத்திருந்தன.

இதனையடுத்து தேசிய பாதுகாப்புச் சபை உடனடியாக கூட்டப்பட்டு எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும், இவ்விடயம் சம்பந்தமாக வெளிநாடு தனது பயணிகளுக்காக முன்னெச்சரிக்கையை விடுத்திருந்தது.

அதனையடுத்தே விடயம் பகிரங்கமானது.
ஆனால் அதற்கு முன்னதாகவே சுற்றுலாத்தளங்கள் உட்பட நாட்டின் பிரதான பகுதிகள் அனைத்துமே பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

தற்போது அந்த நிலைமை மேலும் தீவிரமாக்கப்பட்டு பாதுகாப்பு அதியுச்சமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் எந்தவொரு பிரஜைகளும் அச்சமடைய வேண்டியதில்லை.

நாட்டில் அச்சுறுத்தல் நிலைமைகள் அனைத்தும் களையப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகள் உட்பட நாட்டின் பிரஜைகள் அனைவரும் சுதந்திரமாக நடமாட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments